05.04.2025 - சனிக்கிழமை
இன்றைய தினம் தஞ்சாவூர் செல்வதற்கு மேலும் ஒரு காரணமிருந்தது. கந்தர்வகோட்டை கொத்தகம் ஊரைச் சார்ந்த காமாட்சி சுந்தரம் இளந்தளிர்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் பெசன்ட் ஹாலில் வைத்திருந்தார். அந்த நிகழ்வு ஐந்து மணிக்கென்று அழைப்பிதழில் இருந்தது. அதற்காகவும் நான் தஞ்சாவூர் சென்றேன்.அன்றைய தினம் தஞ்சாவூர் பேருந்தில் செல்கையில் எனக்கும் அருகில் மஞ்சம்பட்டி ஊரைச் சார்ந்த ஜெயபால் என்பவர் அமர்ந்தார். மஞ்சம்பட்டி எனது ஊரான ஆண்டனூருக்கும் அருகிலிருக்கும் ஊர். அண்டனூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊரும்கூட. அவர் என்னை விட ஐந்து வயது குறைவானவராக இருந்தார். அவர் சொன்னார். அப்பொழுதே நீங்கள் உங்களூர் பாளைக்கட்டை, கொல்லைக்காடுகளில் அமர்ந்து படிப்பீர்கள். நான் பார்த்திருக்கிறேன். உங்களின் இந்த நிலைக்கு அந்தப் படிப்புதான் காரணமென்றார். அந்த நினைவுகளோடு நான் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இறங்கி வேலம்பாள் போதி பள்ளியைச் சுற்றி வீடு தேடினேன். இதற்கும் முன்பு இரண்டு முறை இப்பகுதியில் வீடு தேடியிருக்கிறேன். அப்பள்ளிக்கும் எதிர்புறம் ஒரு வீடு பார்த்தேன். பிப்ரவரி மாதம் விசாரிக்கையில் முன்பணம் 35000 என்றும் மாத வாடகை 8500 என்றும் சொன்னார்கள். மார்ச் மாதம் அட்வான்ஸ் தருகிறேன் என்று சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். வீடு நிறைய பேர் கேட்கிறார்கள் என்றார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு வாரம் கழித்து அந்த வீட்டுக்குச் செல்கையில் அந்த வீட்டுக்கு குடிவந்திருந்தார்கள். ஆகவே இந்த முறை வீடு பார்த்து பிடித்திருந்தால் உடனே அட்வான்ஸ் கொடுத்துவிடவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.
போதி பள்ளிக்கும் பின்புறத்தில் ஒரு பையை முதுகுபுறமாகக் கோர்த்துக்கொண்டு நடந்தே தேடினேன். வீடுகள் எனது பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இல்லை. ஒரு வீட்டை விசாரித்தேன். ஆறு இலட்சங்கள் ஒத்திக்குத்தான் விடுவோம் என்றார்கள். இன்னொரு வீடு அப்பார்ட்மெண்ட். ஐம்பதாயிரம் அட்வான்ஸ், பதினெட்டாயிரம் வாடகை. மெயின்டன்ஸ் இரண்டாயிரம் என்றார்கள்.
அப்படியே போதி பள்ளிக்கும் அருகிலுள்ள ஒரு பேக்கரியில் குண்டு சோடா குடித்தேன். அன்றைக்கு அதன் விலை இருபத்து ஐந்து ரூபாய். நேராக பள்ளிக்குச் சென்று என் மனைவி பானுமதி கொடுத்திருந்த ரெஸீம் என்ன நிலையிலிருக்கிறது என்று கேட்டேன். அவருக்கு பணி உத்திரவாதமென்றால் என் மகளையும் இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ப்பதாக சொன்னேன். இன்று சனிக்கிழமை. திங்கட்கிழமை நேரில் வாருங்கள் என்றார்கள்.
பிறகு போதி பள்ளிக்கும் எதிரே இருந்த வீதிகளில் வீடு தேடத் தொடங்கினேன். அப்படியே தேடிக்கொண்டு கலைஞர் நகர் சென்றிருந்தேன். கலைஞர் நகர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் இடையிலிருந்தது. அந்த வழியே தேடிக்கொண்டு அப்படியே பின்வாசல் வழியே புதிய பேருந்து நிலையம் சென்றுவிடலாமென்று நடந்தேன். என்னையும் அறியாமல் கலைஞர் நகருக்குள் நுழைந்தேன். இந்தத் தெருவில் வீடு கிடைக்கும்தான். இங்கேயிருந்து பள்ளிக்கு நடந்துசெல்ல முடியாது. இங்கேயிருந்து செல்வதற்கு கந்தர்வகோட்டையிலிருந்து பேருந்திலேயே வந்து செல்லலாம். ஒரு ஆளுக்கு பேருந்து கட்டணம் ரூபாய் முப்பத்து ரூபாய் என்றால் இரண்டு பேருக்கும் எழுபதாயிரம் ரூபாய். போனால் போகிறதென்று நினைத்தவனாய் பேருந்து நிலையம் நோக்கி திரும்பினேன்.
எனது பையில் ஒரு சட்டைத்துணி இருந்தது. லினன் கிளாத். அதை பேருந்து நிலையத்திற்கும் அருகிலுள்ள கடையில் தைக்க கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக கலைஞர் நகர் சாலை வழியே பேருந்து நிலையம் செல்லாமல் சென்ற வழியிலேயே திரும்பினேன். யாகப்பா பள்ளியையொட்டி ஒரு அப்பார்ட்மென்ட் இருந்தது. அதன் வெளியே ஒரு வாட்ச்மேன் நின்றார். அவரிடம் இங்கு வீடு இருக்கிறதா, என்று விசாரித்தேன். ஆம் இருக்கிறது. அட்வான்ஸ் ஒரு இலட்சம், மாத வாடகை இருபதாயிரம் என்றார்.
இந்தப் பகுதியில் வீடு கிடைத்தால்தான் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவர எளிதாக இருக்கும். நானும் பேருந்து பிடித்து பள்ளிக்குச் செல்லலாம். ஆனால் இங்கு வாடகை குதிரை விலையிலிருக்கிறது என்று யோசித்தவனாய் நடக்கையில் ஒரு வீட்டின் வாசலில் வீடு வாடகைக்கு என்று அறிவிப்பு பலகை தொங்கியது. அந்த இடத்தில் நின்று அந்த எண்ணை அலைபேசியில் ஏற்றினேன். ஒரு சிறுமி அந்த கிரில் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டேன். அவர் வாடகை ஏழாயிரம், அட்வான்ஸ் முப்பதாயிரம் என்றார். நான் எதிர்பார்த்த வாடகையை அவர் சொல்லியிருந்தார்.
வீடு பார்க்கலாமா என்றேன். அவர் ஒரு டீக்கடையைச் சொன்னார். அங்கு சென்று விவரத்தைச் சொன்னேன். என்னால் வர இயலாது. சாவியைத் தருகிறேன். போய் பார்த்து வாருங்கள் என்றார்.
சாவியை வாங்கிக்கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றேன். ஒரு பக்கம் மருத்துவமனை. எதிரே ரெஸ்ட்டாரென்ட். இன்னொரு புறம் கடைகள்.
கீழே இரண்டு வீடுகள். முதற்தளத்தில் இரண்டு வீடுகள். அதற்கும்மேல் இரண்டு வீடுகள். ஒரு வீட்டில் குடி இருப்பதற்கான அடையாளமாக செருப்புகள் கிடந்தன. அடுத்த வீட்டைத் திறந்து பார்த்தேன்.
கந்தர்வகோட்டையில் எனது சொந்த வீட்டின் பாதியளவில் அந்த வீடு இருந்தது. வீட்டில் யாரோ குடியிருந்து சமீபத்தில் வெளியேறி பெயிண்ட் அடித்திருந்தார்கள். இரண்டு பெட் ரூம். ஒன்றில் அட்டாச் பாத்ரூம். வெஸ்ட்ரன். ஒன்று தனி பாத்ரூம். அதிலும் வெஸ்ட்ரன். சின்னதாக கிச்சன். எனக்கு வீடு பிடித்திருந்தது.
வீட்டைப் பூட்டிவிட்டு எதிர்வீட்டின் கதவைத் தட்டினேன். ஒரு அம்மா போன் பேசிக்கொண்டிருந்தார். இரண்டொரு தட்டு தட்டியபிறகே சன்னல் வழியே பார்த்தார்.
என்ன என்றார், வீடு குடிவரலாமா? எல்லா வசதியும் இருக்கிறதா என்றேன். ஆம் வரலாம் என்றார். உங்கள் குழந்தை எங்கே படிக்கிறாங்க என்று கேட்டேன்.
வேலம்பாள் பள்ளியில்தான் என்றார். கீழே வந்தேன். அந்த டீக்கடை சென்று சாவியைக் கொடுத்துவிட்டு ஒரு வடையும் டீயும் சாப்பிட்டேன். இருபத்தைந்து ரூபாய். வீடு பிடித்திருக்கிறது. நாளை மறுநாள் மகளைச் சேர்க்க பள்ளிக்கு வருவேன். அப்டியே என் துணைவியாருக்கு வீட்டைக் காட்டுகிறேன். பிடித்திருந்தால் அன்றைய தினமே அட்வான்ஸ் தந்துவிடுகிறேன் என்றேன். இதையே அந்த டீக்கடைக்காரர் இந்த வீட்டின் ஓனரிடம் தகவலாகத் தெரிவித்தார்.
ஓனர் கிறிஸ்தவர். சென்னையில் குடியிருக்கிறார். எப்பொழுதேனும்தான் தஞ்சாவூருக்கு வருவார். பிரச்சனைக்கு வேலையில்லை என்றார். அவரிடமிருந்து விடைபெற்று தஞ்சாவூர் பெசன்ட் ஹால் சென்றேன்.
07.04.2025
இன்று நார்த்தாமலை திருவிழா முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆகவே இந்த நாளை பாமினிக்கு அட்மிசன் போடும் நாளாக பயன்படுத்திக்கொண்டோம்.
நான் மகள் பாமினி என் மனைவி பானுமதி மூவரும் வேலம்பாள் போதி காம்பஸ் சென்றோம். சேர்க்கை பார்ம் 1000, சுரேந்தர் அதே பள்ளியில் படிப்பதால் 11000 ரூபாய் அட்மிஷன் பீசில் பாதி ரூ 5500 Gpay மூலம் கட்டினேன்.
மனைவி பானுமதிக்கு வேலை வாய்ப்பு குறித்து விசாரித்தேன். இடம் காலி இல்லையென்றும் வாய்ப்பு கிடைத்தால் அழைப்பதாகவும் அதற்கு நன்று தயார் செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.
பிறகு மூவரும் பள்ளியை விட்டு வெளியே வந்தோம். நேராக வடக்கு திசையை நோக்கிச் சென்று L திருப்பத்தில் இருந்த வீட்டைக் காட்டினேன். மனைவிக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றாலும் இதைவிட வேறு வீடு கிடைக்கிறதா என்று தேடினோம். நல்ல வெயிலில் அழைந்ததும் தேடியதும்தான் மிச்சம். பிறகு இந்த வீடே போதுமென்று திரும்பினோம். ரியோ என்கிற டைலர் கடைக்கும் அருகில் ஒரு வீட்டு சமையல் கடை இருந்தது. அதில் மூவரும் சாப்பிட்டோம். சமையல் சுமாராக இருந்தது. ஒரு சாப்பாடு ரூ. 80.
வீடு திரும்பி குளித்து படுத்தேன். என் மகள் சிணுங்கினாள். அவளைத் தேற்றினேன். அவளது சிணுங்கலுக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. வீடு பிடிக்கவில்லையா, வீட்டில் வளரும் பூனையை விடுத்து செல்கிறோமே என்கிற இரக்கமா, கந்தர்வகோட்டை கிறைஸ்ட் த கிங்க் சக தோழிகளை விட்டு பிரிகிறோமே என்கிற கவலையா இல்லை சொந்த வீட்டைவிட்டு பிரியும் கவலையா எதனால் என்று கண்டறிய முடியவில்லை.
பிறகு அவளே ஒரு பை எடுத்துபோய் ஐஸ் கிரீம் வாங்கிவந்து தின்றாள். இதன்பிறகு அவள் பழைய நிலைக்கு மாறினாள்.
இன்றைய தேதிக்கும் முதல்நாள் அதாவது 06.04.2025 அன்று திரு. சிவப்பிரகாசம் அவர்கள் பணிநிறைவு பாராட்டு விழா தமிழாசிரியர் மன்றம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதற்கு நான் செல்லவில்லை. ஆனால் புகைப்படங்கள் அனுப்பினார். இவருடனான நினைவுகளை வேறொரு பதிவாக எழுதுகிறேன்.

10.04.2025
இன்று மகாவீரர் ஜெயந்தி அரசு விடுமுறை. ஆனால் சுரேந்தருக்கு பள்ளி வேலை நாள். மாலை தஞ்சாவூர் சென்று வாடகை வீட்டைக் கட்டினேன். பள்ளியிலிருந்து கொஞ்சம் தூரம்தான். பரவாயில்லை போயிக்கிறேன் என்றான். இருவரும் டீக்கடையில் டீ சாப்பிட்டு பேருந்தில் வீடு வந்துசேர்ந்தோம்.
11. 04. 2025
இன்று Google pay மூலமாக வீட்டுக்காரருக்கு வங்கியில் அட்வான்ஸ் ரூபாய் 30,000 செலுத்தினேன். ஒப்பந்தம் போட்டுக்கொள்ள எனது ஆதார், லைசன்ஸ் போட்டோ எடுத்து அனுப்பினேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக