கதைமண்ணில் கவிதை
கதைமண் எனும் பெயரில் ஒரு பதிப்பகம் இயங்குவது இன்றுதான் எனக்குத் தெரியவந்தது. புதுக்கோட்டை என்சிபிஎச் புத்தக அரங்கில் நாளை தொடங்கவிருக்கும் நிதி ஆண்டிற்காக புத்தகங்களைக் களைத்து எண்ணி அடுக்கிக்கொண்டிக்க, சக்தி மீனாட்சியின் 'நானொரு காடோடி' எனும் நூல் கண்ணில் பட்டது. என்ன பதிப்பகம் என்று பார்க்கையில் கதைமண் என்று தெரியவந்தது.
கடைசி பக்கங்களிலிருந்து கவிதைகளை வாசித்து வந்தேன். நிறைய நல்ல கவிதைகள். ஒரு கவிதை எனக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் கவிதைகளை வாசித்து அணிந்துரைக்கு வந்தேன். நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஈர்த்த கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் அணிந்துரை எழுதியிருந்தார். இந்த அணிந்துரைக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு மொழிக்கு உண்மையானது. "கவிதைகள் பெரும் நிலத்தில் மொழி செழிக்கிறது." ஆமாம்தானே!
சக்தி மீனாட்சியின் கவிதைக்கு வருகிறேன்.
"நாம் இருந்த நேற்று
நீயில்லாத இன்று
நானுமில்லாத
நாளை
எப்போதுமிருக்கும்
காதல்."
31.03.2026. நேரம் - 4.50

கருத்துகள்
கருத்துரையிடுக