AI க்கு ஏன் அம்பேத்கரைத் தெரியவில்லை?

நேற்று காலை நண்பர் ஒருவர் நகை வாங்க வேண்டும், இன்றைக்குத் தங்க விலை என்ன, பத்து மணிக்கு மேல் விலை ஏறுமா,  இறங்குமா யாரிடமேனும் கேட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்டார்.


எனக்கு பங்குச் சந்தை நினைவுக்கு வந்தது. பங்கு சந்தையை வைத்து தங்க விலையின் ஏற்றம் இறங்கங்களை கணித்துவிடலாமென்று அதற்குள் நுழைந்தேன். அப்பொழுது இன்று ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் என்றும் மேலும் சித்திரை 1 பிறப்பு  அரசு விடுமுறை என்றும் நினைவுக்கு வந்தது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளும் அதுவுமாக AI விடம்  இன்று பங்குச் சந்தை உண்டா? என்று கேள்வி கேட்டேன்.  AI பங்குச் சந்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று விடுப்பு இல்லை என்று பதில் கொடுத்தது.

அப்படியா!  வியந்தவனாய் பங்குச் சந்தை தளத்திற்குள் நுழைந்தேன். ஏற்றம் இறக்கம் புள்ளிகள் மாறாமல் அப்படியப்படியே இருந்தன. பங்குச்சந்தை விடுமுறையில் இருந்தது.

இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்பதும் இதனால் அரசு விடுமுறையுடன் பங்குச் சந்தை விடுமுறை என்கிற விசயம் எப்படி AI க்குத் தெரியாமல் போனது என்று யோசித்தேன். இந்திய மக்களைப் போலவே AI யும் அம்பேத்கர் குறித்து அரைகுறையாகவே தெரிந்துவைத்திருக்கிறது என்பதாக புரிந்துகொண்டேன்.




15.04.2026.     இரவு மணி 9.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்