சிலரால் பள்ளி திரும்பிப் பார்க்கப்படுகிறது
மாணவர்களுக்கு இன்று இந்தக் கல்வியாண்டின் கடைசி வேலை நாள். மாணவர்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் அமர்த்தி கோடைகால விடுமுறை நாட்களைச் சொல்லி கோடைக்கால வெயிலில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும். குளம், குட்டை, கிணற்றடிக்குத் தனியாக போகக்கூடாது என்று அறிவுறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கையில் பெரும்பான்மை மாணவர்கள் 'அய்ய்ய்...' என்று குதித்துக்கொண்டு ஓடினார்கள். ஒரு மாணவன் மட்டும் பள்ளியை விட்டு வெளியேற முடியாமல் நடையைப் பின்னிக்கொண்டிருந்தான். அவனை அழைத்து எதையேனும் கேட்க வேண்டும் போலிருந்தது.
எனது பள்ளி நாட்களில் பள்ளியை விட்டு செல்ல முடியாமல் தவிக்கையில் இப்படித்தான் ஓர் ஆசிரியர் என்னை எதிர்கொண்டார். " சார், இனி என்னால இந்தப் பள்ளிக்கூடத்துக்குள்ள நுழைய முடியாதுல?"
அவர் சொன்னார், " ஏன் முடியாது. ஆசிரியரானா வந்திடப் போறே "
இப்படியான உரையாடல் அந்த மாணவனுக்கும் எனக்குமிடையே நிகழ்ந்திடாமலிருக்க அவனைக் கண்டும் காணாமல் விட்டு நகர்ந்தேன். காரணம் ஒன்றுதான். அவன் ஆசிரியராக இந்த பள்ளிக்கு வரவேண்டியவனல்ல. இதற்கும் மேலான ஓர் இடத்திற்குப் போக வேண்டியவன்.
நாள் - 16.04.2026 நேரம் மாலை 8:56



கருத்துகள்
கருத்துரையிடுக