இயல் எண்களை முழுக்கள் ஆள்வது தகுமோ?
ஜனநாயகம் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் எண்கள்தான். எண்கள் நெகிழ்வும் மாயமும் போலியும் கொண்டிருப்பதில்லை. அவை உண்மையும் மெய்மையும் கொண்டவை.
இன்றைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தொகுதி மறுவரையறை மீதான மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இரண்டும் போதிய பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் தோல்வியடைந்திருக்கின்றன. ஒருவேளை தொகுதி மறுவரையறை மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியிருந்தால் இயல் எண்கள் முழுக்களால் ஆளப்படும் துர்நிலை ஏற்பட்டிருக்கும். முழுக்கள் இயல் எண்களோடு பூச்சியம் மற்றும் குறை எண்களைக் கொண்டது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னதாகவே எடுத்து எதிரறிக்கை மற்றும் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சரை நாம் என்ன பாராட்டுவது? இந்தியத் தாயே அவரை உச்சி முகர்கிறது.
இந்தியாவுக்கு தொகுதி மறுவரையறை வேண்டும்தான், ஆனால் அது மக்கட்தொகை அடிப்படையிலானது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம அந்தஸ்துடன் கூடிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் கொண்டதாக இருக்க வேண்டும். எதிர்கால இந்தியாவிடம் இதை எதிர்பார்ப்போம்.
இன்று இந்து தமிழ்திசை இதழில் 'ஜனநாயகத்தில் சக்திவாய்ந்த எண்' எனும் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் எண்கள் நடத்தும் ஜனநாயகக் கடமை என்ன என்பதே இக்கட்டுரை.
இக்கட்டுரை பிரசுரமான இந்நாளில் இந்திய நாடாளுமன்றத்தில் எண்கள் எதற்காகவும் விலை போகாமல் ஜனநாயகக் கடமையாற்றிருக்கிறது.
இன்றைய கட்டுரையில் ஓரிடத்தில் சொன்னதுதான். "ஜனநாயகத்தை வாழ்வித்துக்கொண்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஜனநாயகத்தின் இரத்த ஓட்டமாக இருப்பது எண்கள்."
17.04.2026. நேரம் இரவு - 9.50




கருத்துகள்
கருத்துரையிடுக