இந்தக் கேள்வி சரியா?

அஞ்சல் வாக்குகள் இப்பொழுது வீடு தேடி வருவதில்லை. வீடு தேடி வந்த காலத்தில் அஞ்சல் வாக்குகளில் செல்லாத வாக்குகள் அதிகம் இருந்தன.

இப்பொழுது தேர்தல் பயிற்சி மையத்திலேயே அஞ்சல் வாக்குகள் செலுத்தும் வசதியுடன் அஞ்சல் வாக்குகளுக்கான சான்றொப்பம் இட அலுவலர்களை நியமிப்பதன் மூலம் அஞ்சல் வாக்குப் பதிவு  அதிகரிப்பதுடன் செல்லாத வாக்கு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. இந்தத் தேர்தலில் மேலும் குறையும்.

இன்று தேர்தல் பயிற்சி மையத்தில் அஞ்சல் வாக்கு செலுத்தி வெளியேறினேன். எதிரே வந்த ஒரு நண்பர், " நண்பரே தபால் ஓட்டு செலுத்தியாச்சா?" என்றார்.

" ஆமாம் , செலுத்திட்டேன் நண்பரே " என்றவனாய் இடது ஆட்காட்டி விரலைக் காட்டினேன்.

" நானும்..." என்றவராய் பதிலுக்குக் காட்டினார்.

கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். எதிரே இன்னொரு நண்பர், அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலோடு விரலை உயர்த்தி காட்டினேன். என் அருகில் வந்தவர் என் காதிற்குள்  " யாருக்கு போட்டீங்க?" என்றார்.

எனக்கு இந்தக் கேள்வி அருவறுப்பாக இருந்தது. பதிலுக்கு அவரிடம்  அருவறுப்பூட்டும் விதமாக கேட்டேன். " யாருக்குப் போடணும்?"

இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. அவரிடமே கேட்டேன். "இந்தக் கேள்வி சரியா?"

" எந்தக் கேள்வி?"

" நீங்கள் என்னிடம் கேட்டதும் நான் உங்களிடம் கேட்டதும் "

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

கேள்வி
உள்ளார்ந்த பொருண்மை கொண்டது.

கேட்டல் ( hearing)
வினவுதல் (asking/ quering),  விசாரித்தல்(inquiring) , 
அறிதல் ( questioning)

இவற்றில் "யாருக்கு வாக்களித்தாய்?" என்பது விசாரணை வகையிலானது. விசாரணை கேள்விகள் சட்டரீதியானவை. 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்