இந்து தமிழ்திசை இதழும் நானும்

இந்து தமிழ்திசை இதழும் நானும் 

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளி அண்டனூர் சுரா என்பதாக இந்து தமிழ்திசை நாளிதழ் உப்பிலிக்குடி நாவல் குறித்து எழுதிய நூல் அறிமுகத்தில் எழுதியுள்ளது. மேலும் அக்கினியாற்றின் படுகையில் உப்பெடுக்கும் மக்களின் சிதைந்த வாழ்வியலை இந்நாவலில் பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு படைப்புக்கு இந்தளவிற்கான நூல் அறிமுகம் போதுமானது. இதழுக்கு எனது நன்றிகள்.

எனது எழுத்து பயணத்தில் உப்பிலிக்குடி நாவலை  மிக முக்கிய படைப்பாக கருதுகிறேன். இந்நாவலை அக்னியாற்றுக்கும் அந்த ஆற்றின் பெயரால் பெயர் விளங்கும் ஆத்தங்கரைவிடுதி எனும் கிராமத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

இந்நாவல் குறித்து ஒற்றை வரியில் இந்நாவலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து சொல்வதாக இருந்தால் " வாழ்க்கை என்பது ஏறு வரிசையா, இறங்கு வரிசையா? காலத்திற்கேற்பத்  தொழில் செய்கிறவருக்கு ஏறு வரிசை. காலத்திற்கும் குலத்தொழில் செய்கிறவருக்கு இறங்கு வரிசை" என்கிற வாழ்க்கைச் சூத்திரத்தின் புனைவு மொழிபெயர்ப்பு" என்கிறேன்.






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்