ஈரான் சாவியும் ட்ரெம்ப் பூட்டும்
"சிங்கத்துக்கு கோமாளி வேஷம் கட்டினால் அது கோமாளியையே தூக்கிச்சாப்பிடும்." இது நல்லா இருக்குல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நினைத்தேன். இப்படியாக ஒரு வரி வந்து விழுந்தது.
செந்தில் காமெடிகளில் எனக்குப் பிடித்தமானது, சாவி காமெடி. படம் பெயர் சரியாகத் தெரியவில்லை. செந்தில் வீட்டில் ஒரு ட்ரங்க் பெட்டி களவுப்போய்விடும். குடும்பத்தார்கள் பெட்டி போய்விட்டதே என்று அழுது கூச்சலிடுவார்கள். செந்தில் அவரது டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு சாவியை எடுத்து அவருக்கே உரிய அப்பாவித்தனத்துடன் சொல்வார், ,"சாவி என்க்கிட்டே இருக்கே."
இந்த சாவி காமெடியைத் தூக்கி சாப்பிட்டுவிட்டது அமெரிக்க அதிபர் டர்ம்ப் மீதான ஒரு சாவி காமெடி. இந்த காமெடிக்கு உலகில் சிரிக்காதவர் யார் உண்டு?
ட்ரம்ப்- ஹர்மூஸ் நீரிணையை உடனே திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தை அனுபவிப்பீர்கள்.
ஈரான் - சாவியைத் தொலைத்துவிட்டோம்.
இந்த காமெடிக்காக போர்த்துகீசியருக்கு நன்றி சொல்ல வேண்டும். பூட்டும் சாவியும் அவர்கள் கண்டுபிடித்தது. சாவி போர்த்துகீசிய மொழி.



கருத்துகள்
கருத்துரையிடுக