இது தேர்தல் தமிழ்

மகளோடு  அரசியல் பேசினேன். அவளுக்குத் தெரிந்த அரசியலை என்னிடம் பேசினாள். பிறகு தமிழ் இலக்கணத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள். விளக்கினேன். பிறகு அரசியலை விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மகள் என்னிடம்  எச்சரிக்கையானாள். 

" அப்பா, தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை?"

" இதுகூடவா தெரியாமல் இருப்பேன். 234" 

"தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ?"

"247 "

மகள் எழுந்துவிட்டாள். "எங்கேடி தங்கம் போறே?"

" இருங்க, சுத்தியல எடுத்துக்கிட்டு வாறேன்."

தேர்தல் படுத்தும் பாடுகளில் இதுவும் ஒன்று.






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்