பெயல் முகம்
எப்பொழுதும் பிறந்த நாளுக்கு தவறாது அலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்துவிடுவார் ஏர்வாடியார். இரண்டு வருடங்களுக்கு முன்பு என் வயதையும் எழுத்து அனுபவத்தையும் பாராது அவரது நூலுக்கு அணிந்துரை கேட்டார். கூச்சம்தான், அன்பு எழுத்துருக்களால் எழுதி அனுப்பினேன். ஒவ்வொரு ஆண்டும் கவிதை உறவு இலக்கியப் போட்டிக்கு நூல்கள் அனுப்பச்சொல்லி கேட்பார். அனுப்பியிருக்கிறேன். இரண்டு முறை எனது நூல்கள் கவிதை உறவு விருது பெற்றிருக்கின்றன. இதையெல்லாம் விடவும் நான் பெருமையாக கருதுவது ஒவ்வொர் ஆண்டும் அவர் கொண்டுவரும் கவிதை உறவு ஆண்டு மலருக்கு தவறாது சிறுகதை கேட்பதுதான். இவருக்காக ஒவ்வொர் ஆண்டும் ஒரு கதை எழுதி விடுகிறேன் அல்லது எழுதியதில் ஒன்றைத் தனியே எடுத்து வைத்துவிடுகிறேன். இந்த ஆண்டும் வழக்கம்போல மலருக்கு சிறுகதை கேட்டதும் 'பெயல் முகம்' எனும் சிறுகதையை அனுப்பினேன். அழகான ஓவியங்களுடன் மலரில் அலங்கரித்திருக்கிறது. பெட்டகமான மலர். இலக்கியத்திற்கு இது பெரும் பங்களிப்பு. ஏர்வாடியாரின் 79 ஆவது அகவையை வணங்குவதனூடே இதழை ஆரத்தழுவுகிறேன்,,,




கருத்துகள்
கருத்துரையிடுக